நான் மட்டும் இப்ப அதிபராக இருந்திருந்தால்… உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து…!!

Author: Babu Lakshmanan
24 February 2022, 6:36 pm

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இது குறித்து முன்னாள் அமெரிக்கா அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா அதிபர் புதின் , உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் 6 போர் விமானங்களையும், ஹெலிகாப்டரையும் வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த தாக்குதலில் ரஷ்யா தரப்பில் இருந்து 50 வீரர்களும், உக்ரைன் தரப்பில் இருந்து 40 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகளுக்கு உக்ரைனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சில உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்தும் வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

Trump_UpdateNews360

அவர் கூறியதாவது :- உக்ரைன் – ரஷ்யா இடையிலான நிலைமைய முறையாக கையாண்டிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எனக்கு நன்றாக தெரியும். அமெரிக்காவில் என்னுடை தலைமையில் அரசாங்கம் அமைந்திருந்தால், நிச்சயம் அவர் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்க மாட்டார்.

ஆனால், தற்போது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. புதின் தனக்கு என்ன வேண்டுமோ, அதை தற்போது பெறுவதோடு, கச்சா எண்ணெய் விலை உயர்வதால் மேலும் பணக்காரராகிக் கொண்டிருக்கிறார், எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்தப் பேச்சின் மூலம் ரஷ்யா – உக்ரைன் மீதான போரை தடுக்க புடின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

  • Dhanush Nayanthara controversy trending ராக்காயி vs அசுரன்…அனல் பறக்கும் வீடியோ..!
  • Views: - 1720

    0

    0