உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதார தடை : பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை..!!

Author: Rajesh
25 February 2022, 3:40 pm

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது இங்கிலாந்து பொருளாதார தடை விதித்ததால் ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை ரஷ்யா விதித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ ரஷ்யா தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு வான்வெளியை மூடியது ரஷ்யா. பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து கூறிய நிலையில் ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!