ரஷ்யாவின் ஆயுதங்களை வைத்தே திருப்பி அடிக்கும் உக்ரைன் : ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து தடை… உக்ரைனுக்கு பெருகும் ஆதரவு!!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2022, 4:52 pm
தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவிட்ட நிலையில் பெல்ஜியமும் தடை விதித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ராணுவ படைகளை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
மேலும் தலைநகர் கீவ்-ஐ தன் வசமப்படுத்த போரை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய படைகளை எதிர்த்து, உக்ரைனும் தங்களால் முடிந்த வரை போராடி வருகிறது. உக்ரைன் அதிபர் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ராணுவ நிதி உதவி, உணவு, மருந்துகள், டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.
ரஷ்யாவின் விடாப்பிடியான மோதல் போக்கை கண்டித்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளி தளத்தில் பறக்கக்கூடாது என்று உக்ரைனை சுற்றியுள்ள நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டென்மார்க்கை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்து அயர்லாந்து மற்றும் பெல்ஜியம் அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று ரஷ்யாவுக்கு பல நாடுகள் அடுத்தடுத்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஹன்னா மலயார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 146 டாங்கிகள் (பீரங்கிகள்), 27 போர் விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடங்கிய 4 நாட்களிலேயே ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் உக்ரைன் ராணுவனத்தை பொறுத்தவரை 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இறந்துள்ளார்கள் என்று இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டின் வீரர்கள் எத்தனை பேரை கொன்றுள்ளார்கள் என்று முழுமையான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் நவீன ஆயுதங்களை வழங்கிய ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவத்தை வீழ்த்தி உக்ரைன் ராணுவம் கைப்பற்றி வருவதாகவும் அறிவித்துள்ளார்.
0
0