உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க காரணமான ‘புடினின் பயம்’ : 3வது உலகப்போருக்கு வித்திட்டதா ரஷ்யா.? (தாக்குதல் நடத்தும் வீடியோ உள்ளே)

Author: Babu Lakshmanan
24 February 2022, 12:13 pm

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தங்களது நாட்டோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் நீண்டகால திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் பிரிவினைவாதிகளின் மூலமாக, உக்ரைனை ஆக்கிரமிக்கத் தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

vladimir_putin_russia_updatenews360

இந்த சூழலில் ரஷ்யாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை பாதுகாத்துகொள்ள அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான ‘நேட்டோ’வின் உதவியை நாடியது. அதாவது, நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாக சேருவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நேட்டோ உறுப்பு நாடுகள் பச்சை கொடி காட்டின. இதனால், உக்ரைன் நேட்டோவில் இணைவது உறுதியாகியது.

ஆனால், இதனை ரஷ்யா விரும்பவில்லை. நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போவதோடு, நேட்டோ படைகளால் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ரஷ்யா அஞ்சுகிறது. இதன் காரணமாகவே, நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு முன்பாக, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க திட்டமிட்டது. இதற்காக, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

Russia-Ukraine conflict: Live updates and latest news coverage

மேலும், உக்ரைனில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும், லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனித்தனி நாடாக அறிவித்து, பிரிவினைவாதிகளின் ஆதரவை பெற்றார் ரஷ்ய அதிபர் புடின். இதைத் தொடர்ந்து, தனது ரஷ்ய படைகளை அந்த இரு பிராந்தியங்களுக்கு சென்று தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டார். இதுவே, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான ஆரம்பமாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டது.

https://twitter.com/JesseCohenInv/status/1496730354044084226

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை கடும் உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால்,இதனை பொருட்டாகவே எடுக்காத புடின், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு உத்தரவு போட்டார்.

அதன்பெயரில் தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் விமான தளங்கள் உள்ளிட்டவை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

உலக நாடுகளையும் மீறி ரஷ்யா இந்த தாக்குதலை நடத்த இரு முக்கியக் காரணங்கள் உள்ளது. உக்ரைன் நோட்டோ அமைப்பில் சேர்ந்து விட்டால், தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகிவிடும் என்பதால், அந்நாட்டை மிரட்டி, உருட்டி, தனது கட்டுப்பாட்டில் வைக்க ரஷ்யா முயற்சிக்கிறது.

https://twitter.com/OSINT_Ukraine/status/1496731799766151168

மற்றொரு காரணம், உலகளவில் வலிமையான ராணுவ கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் 2வது நாடாக ரஷ்யா உள்ளது. அதன் மீது கொண்ட அதீத நம்பிக்கையே, உலக நாடுகளை எதிர்த்து இந்தப் போரை அதிபர் புடின் துவக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் 8,500 அணுஆயுதங்களை அந்நாடு கொண்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் மொத்தம் 7,66,055 படை வீரர்கள் இருக்கிறார்கள். 15,000 பீரங்கிகள், 4,498 போர் விமானங்கள், 352 போர்க் கப்பல்கள், 55 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் உள்ளது. ஒரு வருடத்துக்கு 84.5 பில்லியன் டாலர் தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கி வருகிறது ரஷ்யா.

இதஒருபுறம் இருக்க, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், 3வது உலகப் போரிற்கு அடித்தளமாக அமைந்து விட்டதா..? என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. காரணம், உக்ரைன் அமெரிக்காவின் ஆதரவை நாடி வருவதால், பதிலுக்கு நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தினால், உலக நாடுகளின் அச்சம் உண்மையாகி விடும் சூழல் உருவாகியுள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 1850

    0

    0