அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… ஆபாச பட நடிகையால் எழுந்த சிக்கல் ; பரபரப்பில் உலக நாடுகள்…!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 11:33 am

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 10க்கும் அதிகமான பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தது அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு, ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல் தான் வெளியிட்ட புத்தகத்தில் டிரம்புடனான உறவு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

2016ம் ஆண்டு வெளியான இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தாலும், இதன் தாக்கம் தேர்தலில் பயங்கரமாக எதிரொலித்தது. எனவே, ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியலுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து, பிரச்சனையை சரிகட்ட டிரம்ப் முயற்சித்துள்ளார். மேலும், இந்தத் தொகையை தனது தேர்தல் பிரச்சார செலவுகளில் கணக்கு காண்பித்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியது.

அதேவேளையில், டிரம்ப் சரண்டராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த டிரம்ப், சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ