தைவானில் வந்து இறங்கிய அமெரிக்க பிரதிநிதி… பற்றி எரியும் சீனா : இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம்!!
Author: Babu Lakshmanan2 August 2022, 9:51 pm
பெரும் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க பிரதிநிதி தைவான் சென்றுள்ள நிலையில், சீனா தனது போர் விமானங்களை பறக்கவிட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தைவான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சீன அதிபர் ஜிங்பிங், நான்சி பெலோசி தைவான் வருகையை அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுவோர், சாம்பலாகிப் போவது உறுதி என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.
நான்சி பெலோசி தனது ஆசிய சுற்றுப்பயணத்தை துவக்கி முதற்கட்டமாக சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து பேசினார். இந்நிலையில் நான்சி பெலோசி, தைவான் சென்றடைந்தார். அவரை தைவான் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர். தைவானின் தைப்பிக்கு வந்தடைந்த பெலோசிக்கு தைவான் ராணுவ பாதுகாப்பு அளித்து வருகிறது.
சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்ததால், சீனா – தைவான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்வேசத அளவில் பரபரப்பான செய்தியாகியுள்ளது.
இதற்கிடையே நான்சி பெலோசியின் பாதுகாப்பிற்காக 13 அமெரிக்க போர்விமானங்கள் ஜப்பானிலிருந்து தைவானின் தைப்பி நகர் வந்தடைந்தன. அதேவேளையில், தைவான் நீரிணை பகுதியில் சீன போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம் உருவாகியுள்ளது.