கட்டிய மனைவி மீது இவ்வளவு வன்மமா..? 17 முறை கத்தியால் குத்தியும் தீராத ஆத்திரம் ; காரில் சென்று கொடூரத்தை நிகழ்த்திய கணவன்…!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 10:05 am

மனைவியை 17 முறை கத்தியால் குத்தி விட்டு, ஊசலாடிக் கொண்டிருந்த உயிரை காரை ஏற்றி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பிலிப் மேத்யூ. இவருக்கு மெரின் ஜாய் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மெரின் ஜாய் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கணவனை விட்டு பிரிந்து வாழ மெரின் ஜாய் முடிவு செய்துள்ளார். ஆனால், இதனை விரும்பாத பிலிப் மேத்யூ, மனைவியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, இனிமேல் சண்டை போட மாட்டேன் என உறுதியளிக்கும்படி மெரின் ஜாய் கூற, அதற்கு மேத்யூ எந்த பதிலோ, உத்தரவாதமோ கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கம் போல மெரின் ஜாய் வேலைக்கு சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் திரும்பி வருவதால், மனைவி தன்னை விட்டு போய் விட்டாலோ என்ற பயமும், சந்தேகமும் மேத்யூவுக்கு தோன்றியுள்ளது. உடனே, மனைவி வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, பணி முடிந்த வெளியே வந்த மெரின் ஜாயை பார்த்து கடும் ஆவேசமடைந்த கணவர், தான் ஓட்டிச்சென்ற காரிலேயே, மனைவி மீது வேகமாக மோதினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மனைவியை, கத்தியால் 17 முறை ஆவேசமாக குத்தினார்.

ரத்தம் சொட்ட சொட்ட தரையில் விழுந்த மனைவி உயிருடன் இருப்பதைக் கண்டு, அவர் மீது காரை பலமுறை ஏற்றி, கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ