அடுத்த 48 மணிநேரம்தான்… ரஷ்யாவை உசுப்பேற்றுகிறதா அமெரிக்கா…? உக்ரைனில் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம்..!!

Author: Babu Lakshmanan
26 February 2022, 11:38 am

உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் – ரஷ்யா முடிவு செய்துள்ளன.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 3வது நாளாக இன்று தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைனை சூறையாடி வருகின்றன. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் இதுவரையில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யா தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தலைநகர் கிவ்-வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறியுள்ளன. டாங்கிகள், போர் விமானங்களின் மூலம் கிவ்வில் உள்ள முக்கிய ராணுவப் பகுதிகளை தாக்கி வருகின்றன.

இதனிடையே, உக்ரைனில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ரஷ்யா ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கிவ் நகரை ரஷ்ய ராணுவம் தாக்கி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் கிவ்-வில் இருந்து வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மேலும், அடுத்த 48 மணிநேரத்திற்குள் கிவ் தலைநகர் ரஷ்யாவின் வசமாகி விடும் என்று அமெரிக்கா கணித்துள்ளது. இது உக்ரைனில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

biden_updatenews360

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு, எங்களுக்கு தேவை ஆயுதங்களே தவிர, Ride அல்ல என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலளித்துள்ளார்.

முன்னதாக, உக்ரைன் நாட்டின் ஒட்டுமொத்த உடனடி தேவைக்காக 250 மில்லியன் டாலரும், பாதுகாப்பு, கல்விக்காக 350 மில்லியன் டாலரும் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?