கூட்டமான பகுதியில் புகுந்து துப்பாக்கிச்சூடு… 22 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வெளியானது துப்பாக்கி ஏந்திய நபரின் புகைப்படம்..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 1:24 pm

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பொதுமக்கள் நடமாடிக் கொண்டிருந்த பகுதிக்குள் புகுந்து கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கையில் அதிநவீன துப்பாக்கியை ஏந்தியபடி வரும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர் குறித்து தகவல் அளிக்குமாறும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ