மனைவியுடன் உடலுறவு வைத்த வீடியோ ‘லீக்’ : பிரஸ்மீட்டில் கதறி அழுத எம்பி : விசாரிக்க உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2022, 6:12 pm
மனைவியுடன் உடலுறவு வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மனவேதனையடைந்துள்ளார் எம்பி.
பாகிஸ்தான் எம்பியாக இருப்பவர் ஆசம் சுவாதி. 75 வயதாகும் இவர் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.
கடந்த மாதம் ஆசம் சுவாதி கைது செய்யப்பட்டார். கட்சியின் எம்பியாக உள்ள ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பாஜ்வாவை பற்றி சோஷியல் மீடியாவில் விமர்சித்துவிட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த அவர், ஆடைகள் களையப்பட்டு கேலிக்கும் சித்திரவதைக்கும் ஆளானதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் இவர் திடீரென செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இதனால், ஏதுவும் புரியாத செய்தியாளர்களும் சுவாதியை சந்திக்க சென்றனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, நேற்றிரவு என் மனைவியின் செல்போனுக்கு, அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து ஒரு வீடியோ வந்தது.
அந்த வீடியோவில் நானும் என் மனைவியும் படுக்கையில் நெருக்கமாக இருந்த சீன்கள் இடம்பெற்றிருந்தன. இதை பார்த்து என் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
நானும் என் மனைவியும் சமீபத்தில் கோட்டா சென்றிருந்தோம். அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய நாட்டில் உள்ள பெண்களும் இதைப் கேட்டுக் கொண்டிருப்பார்கள். என்னுடைய மகள்களும் பேத்திகளும் கூட இப்போது நான் சொல்வதை கேட்டு கொண்டிருக்கின்றனர்.
என்னால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. இந்த அரசில் இருப்பவர்களே என்னுடைய எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பதால் இதற்கு மேல் அந்த அசிங்கத்தை என்னால் விவரிக்க முடியவில்லை என்று சொல்லி கொண்டே வந்தவர், திடீரென தேம்பி தேம்பி அழுதார். இதனால் செய்வதறியாது செய்தியாளர்கள் தவித்தனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ போலி என்றும், போட்டோஷாப் சாப்ட்வேர் வாயிலாக போலியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாகிஸ்தானின் புலனாய்வு முகமை தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து முறையாக புகார் அளிக்கும்படியும், ஆசம் ஸ்வதாதியிடம் எப்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு இம்ரான் கான் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் சார்பில் ஆசம் சுவாதி மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருக்கிறார்.
வலி, வேதனை மற்றும் அவமான உணர்வை அனுபவித்து வரும் ஸ்வாதியிடமும், அவரது மனைவியிடமும் பாகிஸ்தான் சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.