களைகட்டும் கச்சத்தீவு திருவிழா… விசைப்படகு மூலம் புறப்பட்ட இந்திய பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 10:09 am

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கச்சத்தீவு திருவிழா நடைபெற சூழலில் கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா இன்று நடைபெற உள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து குறைந்த பக்தர்களே கலந்து கொண்டனர். தற்போது இந்த ஆண்டு இயல்புநிலை திரும்பியதால் இந்தியாவில் இருந்து 60 விசைப்படகு மற்றும் 12 நாட்டு படகு மூலம் 1960 ஆண்களும் 379 பெண்களும் 69 சிறுவர்கள் உள்பட 2408 பேர் செல்கின்றனர்.

இந்த திருவிழா இன்று மாலை ஐந்து மணிக்கு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றுடன் துவங்கி அதன்பிறகு சிலுவை பாதை நடைபெறும் நாளை காலை தேர் பவனி உடன் கச்சத்தீவு திருவிழா நிறைவடையும்.

இதுவரையும் கச்சத்தீவை நோக்கி ஐந்து விசைப்படகுகள் புறப்பட்டு உள்ளன. மேலும் இந்தக் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா இலங்கை இருநாட்டு பக்தர்களும் இலங்கை அரசு சார்பாக அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 521

    0

    0