நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தின் 500 டன் எடைகொண்ட பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளித்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இதற்கு பதில் அளித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. 7வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.இந்நிலையில், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் கூறுகையில்,ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஐஎஸ்எஸ் கீழ்மட்ட சுற்றுப்பாதையில்தான் சுற்றுகிறது. இதனால் இதை இயக்க அவ்வப்போது திரஸ்டர்கள் தேவைப்படும். அதாவது சிறிய அளவிலான என்ஜின்கள் நிறைய தேவைப்படும்.
இந்த ஐஎஸ்எஸ் தளத்தில் இரன்டு பாகம் உள்ளது. ஒன்று அமெரிக்க பாகம். இதுதான் ஐஎஸ்எஸ் அமைப்பை உறுப்புடன் வைத்து இருக்கிறது. அதாவது அதற்கு உள்ளே ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகளை இதுதான் பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா மோதலால் இதை ரஷ்யா இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் டிமிட்ரி ரோகோசின் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது 500 டன் எடை கொண்டது. நாங்கள் ஏதாவது செய்து இந்தியா, சீனா மீது விழுந்தால் என்ன நடக்கும்? உங்களுக்கு அது தேவையா? ஐஎஸ்எஸ் ரஷ்யாவிற்கு மேலே பிறக்கவில்லை. ரிஸ்க் எல்லாம் உங்களுக்குதான் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தற்போது ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதாவது ஸ்பேஸ் எக்ஸ் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இந்த ஐஎஸ்எஸ் தளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்ஸ்யூல் உள்ளது. இதை வைத்து அந்த ஸ்பேஸ் ஸ்டேஷனை இயக்க முடியும். ஸ்பேஸ் ஸ்டேஷனை இந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக இயக்க முடியும்.
சில கடைசி நேர மாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதை வைத்தே நாங்கள் ஐஎஸ்எஸ்ஸை காப்பற்றுவோம் என்ற ரீதியில் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.