ஏர் இந்தியாவுக்கு வந்த சிக்கல்: பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டாரா?: ஹோட்டல் அறையில் நடந்தது என்ன….!!

Author: Sudha
18 August 2024, 4:29 pm

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் லண்டனில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கு நேற்று இரவு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இது குறித்து நைஜீரியாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மிகப்பெரிய நிறுவனம் ஒன்று நடத்தும் ஓட்டல் ஒன்றில் நடந்த சட்டவிரோத சம்பவத்தில் எங்களது ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார். எங்களது ஊழியருக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதுடன், ஆலோசனையும் கொடுத்து வருகிறோம். அவரின் தனிப்பட்ட உரிமைக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

  • Ajith Kumar car race accident அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!