வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி : தொழிலாளர் நலனில் அக்கறை காட்ட முடிவெடுத்த 4வது நாடு!!
Author: Udayachandran RadhaKrishnan17 February 2022, 11:38 am
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்கும் என்பதற்கான சட்ட வரைவை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பல பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் தொழிலாளர் நலனில் அக்கறை காட்டும் விதமாக பல மாற்றங்கள் கொண்டு வர பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ தெரிவித்துள்ளார்.
இதனால் வாரத்தில் 4 நாட்களில் 38 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் என பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சட்டம் தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இந்த ஆண்டு மத்தியில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் நான்கு நாட்கள் மட்டுமே பணி என்பதை பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.