மியா கலிஃபா போட்ட சிங்கிள் டுவிட்.. கிளம்பிய கடும் எதிர்ப்பு ; ஒப்பந்தங்களை ரத்து செய்த நிறுவனங்கள்..!!

Author: Babu Lakshmanan
10 October 2023, 6:34 pm

இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஆபாச பட நடிகை மியா கலிஃபாவுக்கு ஒப்பந்தங்கள் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு காசா மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பின் இந்த திடீர் தாக்குதலுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஆபாச பட நடிகை மியா கலிஃபா கருத்து தெரிவித்திருப்பது கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

மியா கலிஃபா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- இத்தனை நாட்கள் பாலஸ்தீனியர்கள் படும் துன்பங்களை பார்த்தும், நாம் அவர்கள் பக்கம் நிற்காவிட்டால் அதுதான் தவறு. பாலஸ்தீனத்தில் இருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம், அவர்கள் படும் துயரத்தை பதிவு செய்ய சொல்ல முடியுமா..?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன பயங்கரவாதிகளை சுதந்திர போராட்ட வீரர்கள் என மியா கலிஃபா குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கனடா நாட்டின் பிரபல வானொலி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரபல பிளேபாய் நிறுவனமும் அவருடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 961

    0

    0